உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மை பணியாளர்களுக்காக 250 பேட்டரி வாகனங்கள் தயார்

துாய்மை பணியாளர்களுக்காக 250 பேட்டரி வாகனங்கள் தயார்

ராயபுரம், சென்னை மாநகராட்சி சார்பில், பேட்டரி வாகனங்கள் வாயிலாக வீடு வீடாகச் சென்று குப்பை பெறப்படுகிறது.அந்த வகையில், திடக்கழிவு மேலாண்மை துறை சார்பில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர் மண்டலத்தில் துாய்மை பணியாளர்களின் வேலை பளுவை குறைக்கும் வகையில், 250க்கும் மேற்பட்ட குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள், சென்னை மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டு உள்ளன.ஒரு பேட்டரி வாகனத்தின் விலை, தலா 2 லட்சம் ரூபாய். இவற்றை, விரைவில் துாய்மை பணியாளர்கள் பயன்பாட்டிற்கு அளிக்க உள்ளனர்.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:துாய்மை பணியாளர்கள், மூன்று சக்கர சைக்கிள் வண்டியில் குப்பையை சேகரித்து, கையால் இழுத்து வருவதற்குள், பெரும் பாடுபடுகின்றனர். கை ரிக் ஷாவில், 2 கி.மீ., உட்பட்ட பகுதிகளில் மட்டுமே குப்பை சேகரிக்க முடியும். ஆனால், பேட்டரி வாகனத்தால், 30 கி.மீ., வரை உள்ள குப்பையை சேகரிக்க முடியும்.இந்த வாகனத்தை ஒரு முறை 'சார்ஜ்' செய்தால், நான்கு மணி நேரம் பயன்படுத்த முடியும். 60 கி.மீ., வரை இயக்க முடியும். ஒரு வாகனத்தில், ஆறு குப்பை தொட்டிகளை வைத்து, குப்பை சேகரிக்க முடியும். ஒரு தொட்டிக்கு, தலா 100 கிலோ என, 600 கிலோ வரை குப்பை சேகரிக்க முடியும்.மேலும், சுற்றுச்சூழல் மாசு தடுப்பதோடு, பணியாளர்களே வாகனத்தை எளிதில் இயக்கவும் முடியும். வாகனத்தின் பராமரிப்பு செலவும் குறைவு. வேலை பளுவையும் குறைக்கிறது. ராயபுரம் மண்டலத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேட்டரி வாகனங்கள், ஜூன் மாதத்தில், துாய்மை பணியாளர்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி