உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி திருடர்கள் 3 பேருக்கு காப்பு

வழிப்பறி திருடர்கள் 3 பேருக்கு காப்பு

சென்னை: பெரம்பூர், கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவர், நேற்று முன்தினம் இரவு, பெரம்பூர், அகரம் வழியாக நடந்து சென்றார். அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர், கத்தி முனையில் மிரட்டி 500 ரூபாய் பறித்து சென்றார்.இது குறித்து விசாரித்த செம்பியம் போலீசார், புழல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் ராஜ், 24, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். இவர் மீது, 12 குற்ற வழக்குகள் உள்ளன.l அதேபோல, வியாசர்பாடி, மல்லிப்பூ காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 44. இவர், நேற்று முன்தினம் இரவு, வியாசர்பாடி, கோட் செட் ரோடு வழியாக நடந்து சென்றார்.அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர், கத்தியை காட்டி மிரட்டி 1,000 ரூபாய் பறித்து சென்றார். இது குறித்து விசாரித்த வியாசர்பாடி போலீசார், வியாசர்பாடி, பி கல்யாணபுரத்தைச் சேர்ந்த தினேஸ்வரன், 27, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.l மேலும், பெரம்பூர், ஜமாலியா பகுதியில் மர்ம நபர் நபர் ஒருவர், கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி போலீசார், அங்கு ரகளையில் ஈடுபட்ட கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், 27, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை