உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா விற்க முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டு

கஞ்சா விற்க முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டு

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டி சத்திரம் நோக்கி செல்லும் பகுதியில், கஞ்சா விற்க முயன்ற, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார், 23, என்பவரை, அம்மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், 2020 ஜன., 11ல் கைது செய்தனர்.அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, 'செல்வகுமார் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன. எனவே, 5 ஆண்டு சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து' தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை