உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி

தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி

கும்மிடிப்பூண்டி, சென்னை ரெட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் மனைவி துர்கா, 26. இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை கிருத்திகா. துர்கா ஆறு மாத கர்ப்பிணி. இதனால் கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மதியம் துர்கா துாங்கிக்கொண்டிருந்த போது, குழந்தை கிருத்திகா, வீட்டின் வெளியே உள்ள தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ