| ADDED : ஜூலை 05, 2024 12:21 AM
மெரினா, ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் ஆர்த்தி, 24; மாநிலக் கல்லுாரியில் பிஎச்.டி., படித்து வந்தார்.நேற்று மதியம், தன் தோழி ரேணுகாதேவியுடன், 'டி.வி.எஸ்., ஸ்கூட்டி' ஸ்கூட்டரில், மெரினா காமராஜர் சாலையில் சென்றார். லேடி வெலிங்டன் கல்லுாரி அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த இந்தியன் ஆயில் டேங்கர் லாரி, இவர்களது வாகனத்தில் மோதியது.இதில், லாரியின் பம்பரில் ஆர்த்தியின் உடை சிக்கி, சிறிது துாரம் இழுந்துச் சென்றபின், லாரி நின்றது. அவரது தோழி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.உடனே, ஆர்த்தியை அங்கிருந்தோர் மீட்டு, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்தது தெரிந்தது.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தாம்பரத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுனர் மாடசாமி, 45, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.