உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அமைந்தகரையில் பைக் திருடி ராயபுரத்தில் பதுக்கியவர் கைது

அமைந்தகரையில் பைக் திருடி ராயபுரத்தில் பதுக்கியவர் கைது

அமைந்தகரை, அமைந்தகரை, வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் குகனேஷ், 27; தனியார் நிறுவன ஊழியர். இவரது 'பைக்'கை கடந்த 21ம் தேதி அதிகாலை 3:20 மணியளவில், மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, இருவர் பைக்கை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.இந்த வீடியோ இணையத்தில் பரவியது. புகாரின்படி, அமைந்தகரை போலீசார் விசாரித்ததில், வியாசர்படியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக், 30, என்பவர், கூட்டாளியுடன் சேர்ந்து திருடியது தெரிந்தது.அவரை பிடித்து விசாரித்ததில், அமைந்தகரையில் திருடிய பைக்கை, எண்ணுார் நெடுஞ்சாலையில் உள்ள ராயபுரம் பகுதியில், குடியிருப்பில் நிறுத்தி வைத்திருப்பதை ஒப்புக் கொண்டார். பைக்கிற்கு புதிய சாவி தயார் செய்து, வேறு நபருக்கு விற்க திட்டமிட்டதும் தெரிந்தது. போலீசார் பைக்கை பறிமுதல் செய்து, கார்த்திக்கை நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ