உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது குடித்ததை கண்டித்த ஏட்டுவுக்கு அடி, உதை

மது குடித்ததை கண்டித்த ஏட்டுவுக்கு அடி, உதை

கொடுங்கையூர், ஆகொடுங்கையூர் காவல் நிலைய தலைமை போலீஸ்காரர் ஜெய அந்தோணி சுந்தர்ராஜ். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர், 60 அடி சாலையில் ரோந்து பணியில் இருந்தார்.அப்போது ஆறு பேர் கும்பல், நடுவழியில் மது குடித்துள்ளனர். அவர்களை ஜெய அந்தோணி சுந்தர்ராஜ் கண்டித்துள்ளார். இதில் மூவர் கிளம்பிய நிலையில், மற்ற மூவர் குடிபோதையில் தகராறு செய்து ஜெய அந்தோணி சுந்தர்ராஜை தாக்கினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு, வலது கண் புருவத்தில் மூன்று தையல்கள் போடப்பட்டன.கொடுங்கையூர் போலீசார், போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை