| ADDED : மார் 25, 2024 12:30 AM
வளசரவாக்கம்:ஸ்ரீபெரும்புதுார் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, மதுரவாயல் சட்டசபை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம், வளசரவாக்கத்தில் எம்.எல்.ஏ., கணபதி தலைமையில் நேற்று நடந்தது.இதில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:பா.ஜ.,வின் தோல்வி முகத்தை, கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் நிகழ்வுகளை கொண்டு நாம் அறிய முடியும்.வட கிழக்கு மாநிலம் என, ஏழு மாநிலங்களை சொல்வர். அதில், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ., போட்டியிடாது என அறிந்துள்ளனர். அவற்றில் மாநில கட்சிகளுக்கே ஆதரவு அளிப்போம் என அறிவித்துள்ளனர்.இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமல்ல, வட கிழக்கு ஏழு மாநிலங்களிலும் பா.ஜ., 'டிபாசிட்' பெற முடியாது என்ற காரணத்தை, அவர்கள் உணர்ந்துள்ளனர்.இந்தியாவின் 36 மாநிலங்களில், மூன்றில் இருந்து அவர்கள் விலகி உள்ளனர். எத்தனை மாநிலங்களில் இருந்து விலகுவரோ என தெரியாது.தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும், பா.ஜ.,வின் தோல்வி, 100 சதவீதம் உறுதியாகி உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.