உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய சிலம்பம் போட்டியில் பதக்கங்கள் அள்ளிய சென்னை

தேசிய சிலம்பம் போட்டியில் பதக்கங்கள் அள்ளிய சென்னை

சென்னை : சென்னை, சாந்தோம் மான்போர்ட் அரங்கில், சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூட அறக்கட்டளை மற்றும் சுவாமி விவேகானந்தா அனைத்து விளையாட்டு இளைஞர் சங்கம் சார்பில், தேசிய சிலம்ப போட்டிகள் நடந்தன. இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 1,000 பேர் பங்கேற்றனர். இதில், 5 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண்களுக்கு வெவ்வேறு வயது பிரிவுகளில், ஒற்றை சிலம்ப சுழற்சி, இரட்டை சிலம்ப சுழற்சி, தொடுமுறை உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.இதில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த விவேகானந்தா சிலம்பக்கூட அறக்கட்டளை மற்றும் வீரத்தமிழர் சிலம்பக்கூடத்தின் மாணவர்கள் அசத்தலாக விளையாடி, தலா, 60 பதக்கங்களை வென்று, மாவட்டத்திற்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர்.அதைத்தொடர்ந்து, தேனி மாவட்ட சிலம்ப வீரர்கள், 50 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தையும், சேலம், செங்கல்பட்டு மாவட்ட வீரர்கள் தலா, 45 பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.வெற்றி பெற்ற வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு, ரோட்டரி சங்க கவர்னர் முத்துபழனியப்பன், அக்வா பியூர் பிளஸ் பை இயக்குனர் சக்திவேல், வழக்கறிஞர் உமையாள் காஸே ஆகியோர் பதக்கங்கள் வழங்கி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை