உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவால் திணறல்

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவால் திணறல்

ஆவடி:சென்னை -- திருத்தணி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆவடி புது ராணுவ சாலையை இணைக்கும் விதமாக, ஆவடி செக்போஸ்ட் ரயில்வே மேம்பாலம் உள்ளது.ஆவடி செக்போஸ்ட் சுற்றுவட்டார பகுதியில், பல தனியார் மற்றும் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. பள்ளி மாணவ - மாணவியர் தினமும் இந்த மேம்பாலத்தில் நடந்து செல்கின்றனர்.இந்நிலையில், ஆவடியில் உள்ள இறைச்சிக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், இந்த மேம்பாலத்தின் ஓரத்தில் தினமும் கொட்டப்படுகின்றன. மர்ம நபர்களின் இந்த அத்துமீறிய செயலால், அப்பகுதி குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. இதனால், துர்நாற்றம் தாங்க முடியாமல், பகுதிவாசிகள் திணறியபடி அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.அப்பகுதியில் உள்ள குப்பை மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தி, விதிமீறலில் ஈடுபடும் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.இல்லாவிட்டால், இப்பகுதி தொற்று நோயின் பிறப்பிடமாக மாறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி