உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.ஐ.,க்கு கமிஷனர் விருது

எஸ்.ஐ.,க்கு கமிஷனர் விருது

சென்னை:சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின் படி, ஒவ்வொரு மாதமும் சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரி அல்லது போலீசாரை தேர்ந்தெடுத்து, நட்சத்திர காவல் விருது வழங்கப்பட்டு வருகிறது.ஜனவரி மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக ராமாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்பிரபு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் நேற்று நேரில் அழைத்து, 5,000 ரூபாய் வெகுமதியும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.கடந்த ஜனவரி மாதம் செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மூவரை, சிறப்பாக செயல்பட்டு கைது செய்ததற்காக விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி