உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விளம்பர பதாகைகளால் நடைமேம்பாலம் அடைப்பு அநாகரிக செயல் நடப்பதாக புகார்

விளம்பர பதாகைகளால் நடைமேம்பாலம் அடைப்பு அநாகரிக செயல் நடப்பதாக புகார்

தரமணி:வேளச்சேரி - தரமணி 100 அடி சாலையில், பேபிநகர் மற்றும் தரமணி சந்திப்பில், இரண்டு நடைமேம்பாலங்கள் உள்ளன.இதில் உள்ள நகரும் படிக்கட்டுகள், பல மாதங்களாக செயல்படவில்லை. குப்பை, மண் நிறைந்து சுகாதார சீர்கேடாக உள்ளது.இரவு நேரத்தில், நடைமேம்பாலம் மைய பகுதியில் சிலர் கஞ்சா புகைப்பதோடு, ரகசியமாக அவற்றை விற்கவும் செய்கின்றனர்.அவர்களுக்கு வசதியாக, நெடுஞ்சாலைத் துறை அனுமதி இல்லாமல், நடை மேம்பாலத்தில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.சாலையில் இருந்து பார்த்தால் எதுவும் தெரியாத வகையில், மறைவாக உள்ளதால், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு மிகவும் வசதியாக உள்ளது.இரவில் சிலர், பெண்கள், திருநங்கையரை அழைத்துச் சென்று அநாகரிக செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால், இரவு நேரத்தில் நடைமேம்பாலத்தை பயன்படுத்த, பெண்கள் அச்சப்படுகின்றனர்.சாலையில் இருந்து பார்த்தால், நடைமேம்பாலம் பாதை பகுதி தெரியும் வகையில், விளம்பரங்களை அகற்றி, சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுக்க வேண்டும் என, தரமணி பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 19, 2024 16:34

என்ன செய்வது ? 'ஏழைக்கேற்ற எள்ளுருண்டை பெரிய ஸ்டார் ஹோட்டல்கள், pub களில் உள்ள அளவு இல்லாவிட்டாலும் இந்த அளவாவது 'வசதி' செய்து கொடுத்து அதற்கேற்ற 'தட்சிணை ' பெற்றுக்கொண்டிருப்பார்கள் திராவிட மாடலின் எந்த செயலும் கமிஷன், லஞ்சத்துக்காகவே இருக்கும்


மேலும் செய்திகள்



புதிய வீடியோ