உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரேன் பழுதால் போரூரில் நெரிசல்

கிரேன் பழுதால் போரூரில் நெரிசல்

போரூர், போரூர்- மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக, தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இச்சாலையில், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.நேற்று காலை, போரூர் - கிண்டி செல்லும் மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் முகலிவாக்கம் அருகே, மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக கொண்டுவரப்பட்ட ராட்சத 'கிரேன்' பழுதாகி, சாலையின் குறுக்கே நின்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அய்யப்பன்தாங்கல் முதல் ராமாபுரம் வரை, சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போரூர் மேம்பாலத்தின் மீதும், வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இதையடுத்து போரூர் போக்குவரத்து போலீசார், வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பினர். மூன்று மணி நேரத்திற்குப் பின், கிரேன் அங்கிருந்து அகற்றப்பட்டது. இதன்பின், படிப்படியாக போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை