உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 268 மேஜைகளில் ஓட்டு கணக்கீடு

268 மேஜைகளில் ஓட்டு கணக்கீடு

சென்னை, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:ஓட்டு எண்ணும் மையங்களில், ஓட்டு எண்ணிக்கையின்போது 334 நுண் பார்வையாளர்கள், 318 கண்காணிப்பாளர்கள், 325 உதவியாளர்கள், 269 அலுவலக உதவியாளர்கள் என, 1,246 பேர் பணியாற்ற உள்ளனர்.அதன்படி, வட சென்னை மற்றும் மத்திய சென்னை ஓட்டு எண்ணிக்கையை கணக்கிட தலா 84 டேபிள்கள்; தென்சென்னையில் 100 டேபிள்கள் என, 268 டேபிள்கள் போடப்படும்.ஓட்டு எண்ணிக்கையில் பணியாற்றுவோர், கணினி குலுக்கல் முறையில், 28ம் தேதியும், இரண்டாம் கட்டமாக, ஜூன் 3, 4ம் தேதி அதிகாலை 5:00 மணியளவிலும், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும். ஓட்டு எண்ணும் மையங்களில், 584 கேமராக்கள் வாயிலாக கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை