| ADDED : ஆக 14, 2024 12:43 AM
சென்னை:'ஸ்மார்ட் பஜார்' நிறுவனம், 'முழு பைசா வசூல்' என்ற அதிரடி தள்ளுபடி விற்பனையை மீண்டும் அறிவித்துள்ளது.'ஸ்மார்ட் பஜார்' நிறுவனத்தின் முழு பைசா வசூல் என்ற அதிரடி தள்ளுபடி விற்பனை, வாடிக்கையாளர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முழு பைசா வசூல் விற்பனை, நாளை முதல் 19 வரை நடக்கிறது.நாடெங்கும் உள்ள, 900க்கும் அதிகமான ஸ்மார்ட் பஜார் ஸ்டோர்களில், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், பேஷன் பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகையை பெறலாம்.வாடிக்கையாளர்கள் பணத்தை அதிகம் சேமிக்கும் வாய்ப்பை, இந்த ஸ்மார்ட் பஜார் வழங்குகிறது. இதன்படி, 725 ரூபாய்க்கு 5 கிலோ பாசுமதி அரிசி, 3 லிட்டர் சமையல் எண்ணெய் கிடைக்கும். ஜீன்ஸ், போர்வை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். பிஸ்கட் ஏதேனும் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்.மேலும், 339 ரூபாய்க்கு அரை கிலோ பாதாம்; 4,999 ரூபாய்க்கு 3 பீஸ் டிராலி செட்; 1,999 ரூபாய்க்கு மூன்று பர்னர் கிளாஸ் டார் காஸ் அடுப்பு கிடைக்கும். டூத் பேஸ்ட், சோப்புகள் 33 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும் என, ஸ்மார்ட் பஜார் நிறுவனம் அறிவித்துள்ளது.