உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அமைச்சர் அன்பரசன் தொகுதியில் குப்பை சேகரிப்பு பணி முடக்கம்?

அமைச்சர் அன்பரசன் தொகுதியில் குப்பை சேகரிப்பு பணி முடக்கம்?

பம்மல், ஆலந்துார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கவுல்பஜார் ஊராட்சி, 6 வார்டுகளை உடையது. பூ, காய்கறி விவசாயத்தில் கொடிகட்டி பறக்கும் இவ்வூராட்சியில், 1,500 குடியிருப்புகள் உள்ளன. தினமும் 6 டன் குப்பை சேகரமாகிறது. குப்பை சேகரிப்பு பணியில், இரண்டு, மூன்று சக்கர வாகனங்கள், 10 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில், இரண்டு வாகனங்களில், ஒரு வாகனம் பழுதாகி, ஆறு மாதங்கள் ஆகின்றன. எஞ்சியுள்ள, ஒரே ஒரு வாகனத்தை கொண்டு, ஆறு வார்டுகளிலும் குப்பை சேகரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால், அனைத்து வீடுகளிலும் குப்பை சேகரிக்க முடியாமல் தெருவில் வீசுவதால், துர்நாற்றம் வீசுகிறது. பலமுறை புகார் அளித்தும், பரங்கிமலை ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.அமைச்சர் அன்பரசன் தொகுதியில் உள்ள கவுல்பஜார் ஊராட்சியில், குப்பை சேகரிப்பு பணி முடங்கும் நிலையில் இருப்பதாக, அப்பகுதியினர் கூறுகின்றனர்.

சாண குவியல்

இந்த ஊராட்சியில், மாடு வளர்ப்போர் அதிகமாக உள்ளனர். அவர்கள், மாட்டு சாணத்தை, மழைநீர் கால்வாயிலேயே கொட்டுகின்றனர்.தொடர்ச்சியாக கொட்டுவதால், ஆறு வார்டுகளிலும் உள்ள மழைநீர் கால்வாய்களில், மாட்டு சாணம் குவிந்து, துர்நாற்றம் வீசுகிறது. கொசுத் தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் சூழலும் அதிகரித்துள்ளது.இந்த நிலை தொடர்ந்தால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி, குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ