உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 1 லட்சம் ஓட்டு கிடைச்சா 5 சவரன் நகை பரிசு! காஞ்சி மாவட்ட செயலர் வாக்கு

1 லட்சம் ஓட்டு கிடைச்சா 5 சவரன் நகை பரிசு! காஞ்சி மாவட்ட செயலர் வாக்கு

செய்யூர்:காஞ்சிபுரம் தனி தொகுதி, தி.மு.க., வேட்பாளர் செல்வம் அறிமுக கூட்டம், செய்யூர் அருகே புத்துார் கூட்டுச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. காஞ்சி தெற்கு தி.மு.க., மாவட்ட செயலர் சுந்தர் தலைமை வகித்தார்.அவர் பேசுகையில், ''கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு 83,000 ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார்.தற்போது நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், செய்யூர் சட்டசபை தொகுதியில் இருந்து 1 லட்சம் ஓட்டுகள் பெற்று தந்து, செல்வத்தை வெற்றி பெற வைத்தால், செய்யூர் எம்.எல்.ஏ.,விற்கு 5 சவரன் நகை வழங்கப்படும் என, வாக்குறுதி அளிக்கிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்