உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் வடிகாலில் கழிவுநீர் சட்டவிரோதமாக இணைப்பு

மழைநீர் வடிகாலில் கழிவுநீர் சட்டவிரோதமாக இணைப்பு

போரூர், போரூர் ஆற்காடு சாலையில், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளால், சாலையில் அடிக்கடி கழிவுநீர் தேங்கி வருகிறது.போரூர் -- வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், சாலை குறுகலாகி,'பீக் ஹவர்'களில் நெரிசல் நிலவி வருகிறது.இந்நிலையில், இச்சாலையில் அடிக்கடி கழிவுநீர் வெளியேறி, சாலையில் குளம் போல் தேங்குவதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வகையில், போரூர் காரம்பாக்கத்தில் அடிக்கடி மழைநீர் வடிகாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் குளம் போல் தேங்கி வருகிறது.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் நிலை உள்ளது. போரூர், ஆற்காடு சாலையில் உள்ள மழைநீர் வடிகால், முறையாக இணைக்கப்படவில்லை.இந்த மழைநீர் வடிகாலில், அங்குள்ள கடைகள் மற்றும் உட்புற சாலைகளில் இருந்து கழிவுநீர் இணைப்புகள், சட்டவிரோதமாக இணைக்கப்பட்டு உள்ளன.இதனால், அடிக்கடி கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்கி வருகிறது. எனவே, மழைநீர் வடிகாலில் சட்ட விரோதமாக வழங்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை