உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இந்தியன் வங்கியின் வாலிபால் நான்கு அணிகள் பலப்பரீட்சை

இந்தியன் வங்கியின் வாலிபால் நான்கு அணிகள் பலப்பரீட்சை

சென்னை, இந்தியன் வங்கியின் பவுண்டேசன் நாளான 118வது ஆண்டை முன்னிட்டு, வாலிபால் போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., வங்கி, சிட்டி போலீஸ் மற்றும் லயோலா கல்லுாரி ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றுள்ளன.ரவுண்ட் ராபின் முறையில் நடக்கும் போட்டியை, இந்தியன் வங்கியின் பொது மேலாளர் மற்றும் சி.இ.ஓ.,வான எஸ்.எல்.ஜெயின் துவங்கி வைத்தார். தினம் இரு போட்டிகள் நடக்கின்றன.முதல் போட்டியில், இந்தியன் வங்கி அணி, 19 - 25, 25 - 15, 25 - 13, 36 - 38, 15 - 12 என்ற கணக்கில் லயோலா கல்லுாரியை தோற்கடித்தது.மற்றொரு போட்டியில், ஐ.ஓ.பி., வங்கி, 25 - 15, 25 - 19, 25 - 21 என்ற கணக்கில் சிட்டி போலீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டிகள், இன்று மாலை வரை நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை