உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 8 ஆசிரியர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

8 ஆசிரியர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை, சென்னை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிக தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன.மீனம்பாக்கம், மதுரவாயல் மற்றும் திருமங்கலம் பள்ளிகளில் தலா ஒரு ஆசிரியர், விருகம்பாக்கம் பள்ளியில் மூன்று ஆசிரியர், வளசரவாக்கம் பள்ளியில் இரண்டு ஆசிரியர் என, மொத்தம் எட்டு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த பணியிடத்திற்கு, பள்ளி மேலாண்மை குழு மூலம் தொகுப்பூதிய சம்பளமாக மாதம் 15,000 ரூபாய் வழங்கப்படும்.தகுதியான நபர்கள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலகத்தில், வரும் 10ம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை