உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லட்சுமி நரசிம்மருக்கு லட்சார்ச்சனை, திருமஞ்சனம்

லட்சுமி நரசிம்மருக்கு லட்சார்ச்சனை, திருமஞ்சனம்

சென்னை, திருவல்லிக்கேணி அகோபில மடத்தில், லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு, வரும் 10ம் தேதி முதல் லட்சார்ச்சனையும், திருமஞ்சனமும் நடக்கிறது.ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்தது, பார்த்தசாரதி பெருமாள் கோவில். இக்கோவில் ரத வீதியில், அகோபில மடத்தின் கிளை அமைந்துள்ளது.இங்கு ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்களும், உலக நன்மைக்காக ஹோமங்களும் நடத்தப்படுகின்றன.அந்த வகையில், நரசிம்ம ஜெயந்தி மற்றும் உலக நன்மைக்காக, லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு, வரும் 10ம் தேதி முதல், 22ம் தேதி வரை, தினமும் காலை 10:00 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7:00 மணிக்கு லட்சார்ச்சனையும் நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி