| ADDED : ஜூன் 30, 2024 12:27 AM
எண்ணுார், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் அருண்குமார், 32; லாரி ஓட்டுனர். நேற்று, காஞ்சிபுரத்தில் இருந்து அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு, மீஞ்சூர் வழியாக மணலி சென்றார். இந்த நிலையில், 'கூகுள் மேப்' காட்டிய பாதையால், மணலி செல்ல வேண்டிய லாரி, எண்ணுார், காமராஜர் நகர் - ரயில்வே சுரங்கபாதைக்குள் சென்ற போது சிக்கி கொண்டது.இதனால், எண்ணுாரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்த, எண்ணுார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொக்லைன் உதவியுடன் லாரியை மீட்டு வெளியேற்றினர்.இதன் காரணமாக, எண்ணுார் - கத்திவாக்கம் நெடுஞ்சாலை, எண்ணுார் விரைவு சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.