உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓசி ஐஸ் கேட்டு சிறுவர்களை தாக்கியவர் கைது

ஓசி ஐஸ் கேட்டு சிறுவர்களை தாக்கியவர் கைது

அண்ணாசாலை, புளியந்தோப்பு, ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் வாசிம், 17. இவரது நண்பர் முகமது உவேஸ், 17. இவர்கள் நேற்று முன்தினம், அண்ணாசாலை, பார்டர் தோட்டம் பகுதியில் ஐஸ் விற்றுக்கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த இதயதுல்லா, 41, என்பவர் அங்கு வந்து, வாசிமிடம் ஐந்து ஐஸ் கேட்டுள்ளார். அதற்கு வாசிம், தன்னிடம் மூன்று உள்ளது. நண்பரிடம் இரண்டு ஐஸ் வாங்கி தருகிறேன். 'பணம் வேண்டும்' என்றார்.ஆத்திரமடைந்த இதயதுல்லா, வாசிம் முகமது உவேஸ் ஆகியோரை சரமாரியாக தாக்கி தப்பினார். அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இதயதுல்லாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ