உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொலை குற்றவாளி 4 ஆண்டுக்கு பின் கைது

கொலை குற்றவாளி 4 ஆண்டுக்கு பின் கைது

பெரியமேடு,கொலை வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல், நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், 2019ல் மோகனா என்ற பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். அவரது உடலை துாக்கில் தொங்கவிட்ட மர்ம நபர்கள், பெண்ணின் நகையை திருடிச் சென்றது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பெரியமேடு போலீசார், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி, 32 என்பவரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜாமீனில் வெளியே வந்த வீராசாமி, நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினார். இதையடுத்து, வீராசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வீராசாமியை, பெரியமேடு போலீசார் நேற்று கைது செய்தனர்.

ரவுடி சரண்

கொலை வழக்கில் கோட்டூர்புரம் ஆனந்த், 30, என்பவர் தலைமறைவானாார். கடந்தாண்டு மே 18ல், சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், ஆனந்திற்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஆனந்த், தனக்கு பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிமன்றத்தில், நீதிபதி முருகன் முன் நேற்று முன்தினம் சரணடைந்தார். அவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை