உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

கோயம்பேடு, திருவேற்காடு மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் குமரவேல், 45. இவர் அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை பணி முடிந்து கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக தனது 'ஹீரோ டீலக்ஸ்' பைக்கில் வீடு திரும்பினார். அப்போது, பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், குமரவேல் துாக்கி வீசப்பட்டு, அவரது தலையில் அந்த வாகனத்தில் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குமரவேல் உயிரிழந்தார். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி