உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவியின் தாய்க்கு கத்திக்குத்து ஒருதலைக்காதல் மாணவர் வெறி

மாணவியின் தாய்க்கு கத்திக்குத்து ஒருதலைக்காதல் மாணவர் வெறி

பெரியபாளையம், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி, சென்னையிலுள்ள அரசு கல்லுாரி ஒன்றில் படித்து வருகிறார்.அதே கல்லுாரியில் படிக்கும் மீஞ்சூர், அத்திப்பட்டு புதுநகரைச் சேர்ந்த பெருமாள் மகன் பரத், 22, என்பவர், காதலிக்குமாறு மாணவிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.இதுகுறித்து தன் பெற்றோரிடம் மாணவி கூறியதால், கல்லுாரிக்கு அனுப்பாமல் நிறுத்தினர். இதையறிந்த பரத், மாணவி மற்றும் அவரது தாய்க்கு போன் செய்து மிரட்டியுள்ளார்.கடந்த 21ம் தேதி மாணவி வீட்டிற்கு சென்று, அவரது தாயை கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து, பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பரத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ