உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பத்ராசல ராமர் தரிசனத்தில் இன்று பட்டாபிஷேகம்

பத்ராசல ராமர் தரிசனத்தில் இன்று பட்டாபிஷேகம்

சென்னை,பக்த பாத சேவா அறக்கட்டளை சார்பில், 'பத்ராசல ராமர் தரிசனம்' சென்னையில் நடந்து வருகிறது. தி.நகர், சவுத் போக் சாலையில் உள்ள கிருஷ்ணசுவாமி திருமண மண்டபத்தில் நடக்கும் மூன்று நாள் விழாவில், இன்று நிறைவு நாளாகும். இரண்டாம் நாளான நேற்று காலை 10:30 மணிக்கு சீதா தேவிக்கு, 1,008 புடவை அர்ச்சனை நடந்தது.இதில், ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அர்ச்சனை செய்த புடவைகள் இலவசமாக வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து பரதநாட்டியம் நடந்தது. நேற்று மாலை 3:00 மணிக்கு சீதா கல்யாணமும், ராமர் விசேஷ ஆரத்தியும் நடந்தது.இன்று காலை 7:30 மணிக்கு ராமநாம மகிமை உபன்யாசம் நடக்கிறது. தொடர்ந்து ஹரி நாம சங்கீர்த்தனை, இன்று மாலை ராம பட்டாபிஷேகமும், 1,008 தங்கமுலாம் பூசப்பட்ட நாணயங்களால் கனகாபிஷேகமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்