உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் வடிகால் சீரமைப்பு பாதசாரிகள் நிம்மதி

மழைநீர் வடிகால் சீரமைப்பு பாதசாரிகள் நிம்மதி

அண்ணா சாலை, நம் நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, அரைகுறையாக விடப்பட்ட மழைநீர் வடிகாலை, நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்துள்ளனர்.சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையை, நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன், எல்.ஐ.சி., அருகே மழைநீர் வடிகாலுடன் நடைபாதை அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வந்தனர். ஆனால், பணிகள் முழுமையடையாமல், ஆங்காங்கே அரைகுறையாக கம்பிகள் நீட்டிக் கொண்டு இருந்தன.இதனால், அவ்வழியாக சென்ற பாதசாரிகள், வேறு வழியின்றி சாலையை தான் பயன்படுத்தி வந்தனர்.விபத்து ஏற்படும் முன், அரைகுறையாக விடப்பட்ட மழைநீர் வடிகால் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து நம் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது, அரைகுறையாக விடப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் முழுமையாக முடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை