உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணியின்போது விபத்து போலீஸ்காரர் உயிரிழப்பு

பணியின்போது விபத்து போலீஸ்காரர் உயிரிழப்பு

போரூர், சென்னை -- மதுரவாயல் அடுத்த திருவேற்காடைச் சேர்ந்தவர் குமரன், 53. இவர், போரூர் காவல் நிலைய தலைமை காவலர். நேற்று மதியம், தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையில், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.போரூர் காவல் நிலைய எல்லை முடிவடைந்த இடத்தில் இருந்து, மீண்டும் போரூர் வருவதற்காக பை - பாஸ் சாலையில் 'யூ - டர்ன்' செய்து திரும்பினார். அப்போது, தாம்பரத்தில் இருந்து போரூர் நோக்கி அதிவேகமாக வந்த 'பஜாஜ் கவாஸ்கி நிஞ்ஜா' பைக் மோதியது.இதில், போலீஸ்காரர் குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவரது உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அதிவேகமாக பைக் ஓட்டி வந்த அண்ணா நகரைச் சேர்ந்த வாலிபர் லேசான காயங்களுடன்தப்பினார். அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்திற்கு காரணம்?

சென்னை, மதுரவாயல் பை - பாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, வாகனங்களை ஒரு வழிப்பாதையில் திருப்பி விட, பை - பாஸ் சாலையில் மைய தடுப்பை உடைத்து, இடைவெளி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், அந்த இடத்தில் 'யூடர்ன்' உள்ளது என, வாகன ஓட்டிகளை அறிவுறுத்தும் விதமாக எந்த எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்படவில்லை. இதுவும் விபத்திற்கான காரணம் என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை