| ADDED : ஜூலை 05, 2024 07:10 AM
பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே, பொது இடத்தில் கழிவுநீர் வெளியேற்றும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பூந்தமல்லி நகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம், வரதராஜபுரம், நசரத்பேட்டை, மேப்பூர், செம்பரம்பாக்கம், பாரிவாக்கம் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.இங்கு பாதாள சாக்கடை திட்டம் இல்லை.இதனால், பூந்தமல்லி நகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வீடுகளில் இருந்து டேங்கர் லாரிகள் வாயிலாக கழிவுநீர் சேகரிக்கப்படுகிறது.இந்த கழிவுநீரை பூந்தமல்லி அருகே, திருமழிசையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வழங்க வேண்டும்.ஆனால், சில டேங்கர் லாரி உரிமையாளர்கள், கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காக, பூந்தமல்லி அருகே வெளிவட்ட சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.எனவே, பொது இடத்தில் கழிவுநீரை வெளியேற்றும் லாரி உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.