உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தமிழக காங்., சார்பில் வயநாடுக்கு நிவாரணம்

தமிழக காங்., சார்பில் வயநாடுக்கு நிவாரணம்

சென்னை, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டசபை தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை சத்தியமூர்த்திபவனிலிருந்து லாரிகளில் நிவாரண பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.சட்டசபை காங்கிரஸ் கொறடா ஹசன் மவுலானா ஏற்பாட்டில், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள், மொபைல்போன்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களுடன் லாரிகளை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வழியனுப்பி வைத்தார்.இத்துடன் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் ஒரு மாத சம்பளம், பல்வேறு மாவட்டங்களில் வசூலிக்கப்படும் தொகை, ராகுலிடம் பேரிடர் நிவாரண நிதியாக வழங்க, தமிழக காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி