உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடியிருப்போர் சங்க 9ம் ஆண்டு கூட்டம்

குடியிருப்போர் சங்க 9ம் ஆண்டு கூட்டம்

சென்னை,ராஜா அண்ணாமலைபுரம், மேற்கு பகுதி குடியிருப்போர் சங்கத்தின் 9வது ஆண்டு கூட்டம், ஆக., 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.இது குறித்த சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆர்.ஏ.புரம், ஸ்ரீனிவாசா அவென்யூ, ராஜா முத்தையா பள்ளியில் காலை 9:30 மணிக்கு நடக்க உள்ள இக்கூட்டத்தில், வீட்டில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவுகளை மாசின்றி பயனுள்ளதாக மாற்றுவது குறித்த வல்லுனர் உரை இடம்பெறும்.மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, 1.60 லட்சம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனையும் நடக்கிறது. அரசு தோட்டக்கலை துறை சார்பில் விதைகள் மற்றும் தோட்ட உபகரணங்கள் விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கூட்டம் நடக்கும் அரங்கில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் வீட்டு உபயோக தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட 18 நிறுவனங்களின் விற்பனை அரங்குகளும் இடம் பெறுகின்றன.சங்கத்தின் தலைவர், செயலர், பொருளாளர் தலைமையில், ஆண்டு விழா அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்.தவிர, புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, உறுப்பினர்கள் கேள்விகளுக்கு விளக்கமும் அளிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை