உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூகுள் பே வாயிலாக மாமூல் கேட்ட ரவுடி

கூகுள் பே வாயிலாக மாமூல் கேட்ட ரவுடி

திருவல்லிக்கேணி:திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் ரவிச்சந்திரன், 59. நேற்று முன்தினம் இரவு, 8:45 மணியளவில், இவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் இருவர், 100 ரூபாய் கொடுத்து, ஒரு மொபைல்போன் எண்ணிற்கு 'கூகுள் பே' வாயிலாக பணம் அனுப்புமாறு கூறியுள்ளனர்.இதற்கு ரவிச்சந்திரன் மறுத்ததால், ஆத்திரமடைந்த இருவரும், 'நாங்க திருவல்லிக்கேணியில் பெரிய ரவுடிகள். தினமும் எங்களுக்கு கூகுள் பே வாயிலாக மாமூல் தர வேண்டும். போலீசில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவோம்' என, பகிரங்கமாக மிரட்டி உள்ளனர்.இதுகுறித்த புகாரை விசாரித்த திருவல்லிக்கேணி போலீசார், இதில் தொடர்புள்ள, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பழைய குற்றவாளி தேவராஜ், 26, என்பவரை, நேற்று கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை