உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆர்.எஸ்.மனோகரின் பேத்தி முத்திரை பதித்த நாடகம்

ஆர்.எஸ்.மனோகரின் பேத்தி முத்திரை பதித்த நாடகம்

சென்னை:ஆர்.எஸ்.மனோகரின் புராண நாடகங்கள் முதல் சமூக நாடகங்கள் வரை, ஏராளமான ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தது. அவரை பின்பற்றி, அவரது பேத்தி ஸ்ருதி, நாடக உலகில் களம் இறங்கி உள்ளார். தன் 3 வயதில் இருந்தே நாடகத்தில் ஆர்வம் காட்டிய ஸ்ருதி, சிறந்த பின்னணி பாடகி, கலை இளமணி பட்டம் பெற்றவர்.தற்போது எம்.பி.ஏ., பட்டம் படிக்கும் ஸ்ருதி, பெங்களூரு நிறுவனத்தில் தன் படிப்பு சார்ந்த பயிற்சி பெற்று வருகிறார். தனது தாத்தாவின் பாரம்பரியத்தை பின்பற்றி, நாடகத்துறையிலும் கவனம் செலுத்தி, சொந்த குழுவை உருவாக்கியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நாடக போட்டிகளில் பங்கேற்று விருதுகளும் வென்றுள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே., சாலையில் உள்ள நாரத கான சபாவில், 33வது கே.எப்.ஏ., கோடை நாடக விழா நடந்து வருகிறது. இதையொட்டி, நேற்று மாலை நாட்டிய நாத நாடக சங்கமம் சார்பில், 'வல்லமை தாராயோ' மேடை நாடக நிகழ்ச்சி நடந்தது. டி.வி.ராதாகிருஷ்ணன் கதை எழுத, நாடகத்தை ஸ்ருதி இயக்கி, தயாரித்துள்ளார். சஹானா என்ற பிரதான கதாபாத்திரத்தில் தன் நடிப்பாற்றலை ஸ்ருதி வெளிப்படுத்தி உள்ளார்.பெண்மைக்குள் உருவான புரட்சியை மையக்கருத்தாக கொண்டு நாடகம் படைக்கப்பட்டுள்ளது. எம்.எஸ் சுப்புலட்சுமியை மானசீக குருவாக கொண்டு மேடை பாடகியான சஹானாவின் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படுகிறது. பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் அமைச்சரின் மகனை கொன்று, சிறை செல்கிறார். இதனால் தன் வாழ்க்கையே முடிந்து போனதாக சஹானா விரக்தி அடைகிறார். இனி மேடையேறி பாடப்போவதில்லை என்ற முடிவுக்கும் வருகிறார். மகனை கொன்ற சஹானாவை, கொல்ல துடிக்கிறார் அமைச்சர். அதற்காக, அவரே சஹானாவை ஜாமினில் எடுக்க முயற்சிக்கிறார். இந்த நிலையில் அமைச்சர் விபத்தில் இறக்க, அந்த செய்தி சஹானாவுக்கு தெரியவருகிறது. சஹானா ஆக்ரோஷமாக பாட, அவரது இசை வாழ்க்கை மீண்டும் துளிர்கிறது. வழக்கமான நாடகங்களில் இருந்து மாறுபட்டு, சமூக நாடகமாக வல்லமை தாராயோ அரங்கேறி உள்ளது. சினிமா பாணியிலான கதை, ஒவ்வொரு காட்சியிலும் விறுவிறுப்பாகவும், அதே நேரம் நகைச்சுவையுடனும் கடக்கிறது. நாடகத்தில் மருத்துவராக வரும் சிவபிரசாத், அமைச்சர் மற்றும் அவரின் உதவியாளர் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் கதைக்குள் ஒன்றி நடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ