உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு

ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு

ஆவடி, ஆவடி கமிஷனரக ஊர்க்காவல் படையில் சேருவதற்கான ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. 'இதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம்' என, ஆவடி போலீஸ் கமிஷனரகம் தெரிவித்துள்ளது.இது குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊர்க்காவல் படையில் வட்டார தளபதி மற்றும் துணை வட்டார தளபதி பதவிக்கு விருப்பம் உள்ள, சமூக சேவையில் ஆர்வம் கொண்ட நல்ல சமூக பின்புலம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள், 18 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் உள்ள நபராக இருக்க வேண்டும். கல்வி தகுதி, நன்னடத்தை மற்றும் உடற்தகுதி வாய்ந்த, ஆவடி கமிஷனரக எல்லையில் வசிக்கும், சமூக சேவை மற்றும் தன்னார்வ தொண்டில் ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.சுய விபரமிட்ட விண்ணப்பங்களை, ஜூலை 15ம் தேதிக்குள், பிறப்பு சான்று, ஆதார் சான்று, கல்வித்தகுதி, உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழுடன் புகைப்படத்தையும் இணைத்து, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை