உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் இன்று முதல் போலீஸ் அபராதம்

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் இன்று முதல் போலீஸ் அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை, தனியார் வாகனங்களில் பதிவு எண் தகட்டில், பத்திரிகை, தலைமை செயலகம், டி.என்.இ.பி., என, துறை சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தும் விதமாக, தேவையற்ற 'ஸ்டிக்கர்' ஒட்ட தடை விதிக்கப்படுகிறது என, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், இரு தினங்களுக்கு முன், சுற்றறிக்கை அனுப்பினர்.போலிகள் மற்றும் சமூக விரோதிகள், வாகனங்களில் ஊடகம் உள்ளிட்ட துறை சார்ந்த 'ஸ்டிக்கர்' ஒட்டி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே, ஸ்டிக்கர் விவகாரத்தில் தடை விதித்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், டாக்டர், வழக்கறிஞர், காவல் துறையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரின் சுற்றறிக்கை குழப்பாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தனியார் வாகனங்களின் பதிவு எண் தகட்டில், துறை ரீதியான மற்றும் தேவையற்ற 'ஸ்டிக்கர்' ஒட்ட தடை விதிக்கப்படுகிறது. மீறி ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்.முதல் முறை விதிமீறலில் ஈடுபட்டால், 500 ரூபாய், அதன் பின்னரும் விதிமீறலில் ஈடுபட்டால், 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

W W
மே 02, 2024 09:43

Too Late


nv
மே 02, 2024 07:14

இது போல ஆயிரம் தடவைக்கு மேலே சொல்லி ஒன்னும் செய்யவில்லை காவல்துறை.. வெறும் கண் துடைப்பு


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை