உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேருந்து மோதி வாலிபர் பலி

பேருந்து மோதி வாலிபர் பலி

பெரம்பூர், பெரம்பூர், தில்லைநாயகம் பிள்ளை இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேம்பு விஷ்வா,18. கடந்த 29ம் தேதி மாலை 4:00 மணியளவில், நண்பரின் 'பைக்'கில், பேப்பர் மில்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் வந்த பேருந்து மோதியதில், விஷ்வாவுக்கு காயம் ஏற்பட்டது. பெரியார் நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஷ்வாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.விபத்து குறித்து, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வுபோலீசார் விசாரிக்கின்றனர். பேருந்தை ஓட்டி வந்த மாதவரத்தை சேர்ந்த சுரேஷ், 52, என்பவரை கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை