உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு திரும்பினார் பி.சுசீலா வீடியோ வெளியிட்டு நன்றி

வீடு திரும்பினார் பி.சுசீலா வீடியோ வெளியிட்டு நன்றி

சென்னை: சிகிச்சை முடிந்து பாடகி பி.சுசீலா வீடு திரும்பினார். அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் இரு நாட்களுக்கு முன் பி.சுசீலா சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் நேற்று நலமாக வீடு திரும்பினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: காவேரி மருத்துவ மனையில், மிகவும் அக்கறையுடன் சிறப்பான சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் காட்டிய பாசத்திற்கும், அக்கறைக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. நான் நலம் பெற பிரார்த்தனை செய்த, கோடானுகோடி அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இவ்வாறு வீடியோவில் பி.சுசீலா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி