உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காரை வாடகைக்கு எடுத்து விற்ற கில்லாடிகள் கைது

காரை வாடகைக்கு எடுத்து விற்ற கில்லாடிகள் கைது

கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் முகமது ஆரிஷ், 38. இவர், தன் மகிந்திரா - எக்ஸ்.யூ.வி., காரை வாடகைக்கு விட, 'ஜூம் கார்' என்ற செயலியில் பதிவு செய்துள்ளார்.இந்த காரை, கடந்த ஜூன் 25ம் தேதி, மேகநாதன் என்பவர் பெயரில் பதிவு செய்து, வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். பின், 27ம் தேதி, காரில் இருந்த 'ஜி.பி.எஸ்.,' இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த முகமது ஆரிஷ், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் போனை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் போலீசில் முகமது ஆரிஷ் புகார் அளித்தார்.விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், கூவனுார் பகுதியை சேர்ந்த ஜான் ஜெயசீலன், 35 என்பவர், போலியான ஆவணங்களை கொடுத்து, சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தீபக், 26, என்பவர் வாயிலாக காரை வாடகைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது. கோவில்பட்டியில் பதுங்கி இருந்த ஜான் ஜெயசீலனை பிடித்து விசாரித்த போது, திருநெல்வேலி மற்றும் பெங்களூரு பகுதியில் உள்ள புரோக்கர்கள் வாயிலாக, போலி ஆவணம் தயார் செய்து, 3.5 லட்சம் ரூபாய்க்கு காரை விற்றது தெரியவந்தது. ஜான் ஜெயசீலன் மீது 2019ல் திண்டுக்கல்லில் கார் திருட்டு வழக்கு இருப்பதும் தெரிந்தது.இதையடுத்து, கர்நாடகா மாநிலம், மங்களூரில் விற்கப்பட்ட காரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜான் ஜெயசீலன் மற்றும் தீபக் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி