உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பையில் கிடந்த நகை மீட்டு ஒப்படைத்த பணியாளர்

குப்பையில் கிடந்த நகை மீட்டு ஒப்படைத்த பணியாளர்

வேளச்சேரி, கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சார்லஸ், 37. அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி பகுதியில் துாய்மை பணி மேற்கொண்டு வருகிறார். நேற்று, பிள்ளையார் கோவில் தெருவில் வீடு தோறும் குப்பை சேகரித்தார். அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர், சிறிய பிளாஸ்டிக் தொட்டியில் குப்பை கொடுத்தார்.சார்லஸ், குப்பையை பேட்டரி வாகனத்தில் உள்ள தட்டில் கொட்டி, தரம் பிரிக்கும் போது ஒரு சவரன் தங்க செயின் இருந்தது.உடனே, ஜோதியை அழைத்து விசாரித்தார். அவர், வீட்டை சுத்தம் செய்யும் போது செயின் குப்பையுடன் சேர்ந்து விட்டதாக கூறினார்.இதையடுத்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த சார்லஸ், அவர்கள் வழியாக, கண்டெடுக்கப்பட்ட நகையை ஜோதியிடம் ஒப்படைத்தார். தன்னலம் கருதாமல் செயல்பட்ட துாய்மை பணியாளரை ஜோதி மற்றும் அவரது குடும்பத்தார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை