உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.2 லட்சம் பிரவுன் சுகர் கடத்திய இருவர் கைது

ரூ.2 லட்சம் பிரவுன் சுகர் கடத்திய இருவர் கைது

குன்றத்துார், குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை, குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில், தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து சென்னைக்கு, குன்றத்துார் வழியே வந்த 'ஸ்விப்ட் டிசைர்' காரை நிறுத்தி சோதனையிட்டனர்.காரில் 25,000 ரூபாய் மதிப்பு 5 கிலோ கஞ்சா, 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய 200 கிராம் பிரவுன் சுகர் ஆகியவை இருந்தன.காரில் பயணித்த, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், 34, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபீனா காத்துன், 30, என்ற பெண் ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்து, போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.அதேபோல், மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்தாஸ், 46. வேளச்சேரி பீனிக்ஸ் மாலில், தச்சு வேலை ஒப்பந்தம் எடுத்து, 20 பேரை வைத்து வேலை பார்க்கிறார்.வேளச்சேரி விரைவு சாலையில், வாடகை வீட்டில் தங்கியுள்ள இவர், சில நாட்களுக்கு முன், சொந்த ஊர் சென்று, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.வழியில், வேளச்சேரியில் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசாரிடம் அவர் சிக்கினார்.அவரது பையில் 600 கிராம் கஞ்சா, 500 கிராம் புகையிலை, பொட்டலங்களாக இருந்தன. சொந்த ஊர் சென்று திரும்பும்போது, இதுபோன்று போதை பொருட்களை எடுத்து வந்து, உடன் பணிபுரிவோருக்கு விற்பது தெரியவந்தது.போலீசார், சந்தோஷ்தாசை கைது செய்து, அவரிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை