உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டான்பாஸ்கோ விளையாட்டு கூடைப்பந்தில் வேலம்மாள் வெற்றி

டான்பாஸ்கோ விளையாட்டு கூடைப்பந்தில் வேலம்மாள் வெற்றி

சென்னை டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், எழும்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் நேற்று நிறைவடைந்தன.கால்பந்து போட்டியில், டான்பாஸ்கோ, செயின்ட் பீட்ஸ், மதர்சா, பொன்னேரி வேலம்மாள், எம்.சி.சி., உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன. அனைத்து போட்டிகள் முடிவில், சேத்துபட்டு எம்.சி.சி., மற்றும் பெரம்பூர் டான்பாஸ்கோ அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், எம்.சி.சி., அணி, 3 - 1 என்ற கணக்கில், பெரம்பூர் டான்பாஸ்கோ அணியை வீழ்த்தி, முதலிடத்தை பிடித்தது.அதேபோல், பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், 13 பள்ளி அணிகள் மோதின. அதில், முகப்பேர் வேலம்மாள் பள்ளி முதலிடத்தையும், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி இரண்டாம் இடத்தையும் வென்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை