உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நல்லான் கால்வாயில் குப்பை கண்டுகொள்ளாத நீர்வளத்துறை

நல்லான் கால்வாயில் குப்பை கண்டுகொள்ளாத நீர்வளத்துறை

கீழ்ப்பாக்கம், நியூ ஆவடி சாலை வழியாக செல்லும் நல்லான் கால்வாயில் போதிய பராமரிப்பு இல்லாததால், நீரில் குப்பை குவிந்து, புதர் மண்டி காணப்படுகிறது.சென்னையின் பெரிய மழைநீர் வடிகால்வாய்களில் ஓட்டேரி நல்லா கால்வாயும் ஒன்று.மழைக்காலங்களில் அதிகப்படியான வெள்ளம் வடிந்து செல்ல, ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.இக்கால்வாய், அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பாடி, வில்லிவாக்கத்தில் துவங்கி, அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் கார்டன், அயனாவரம், புரசைவாக்கம், ஓட்டேரி, புளியந்தோப்பு வழியாக பகிங்ஹாம் கால்வாயில் இணைகிறது.நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ள, 10.84 கி.மீ., துாரம் கொண்ட இக்கால்வாயில், போதிய அளவில் கூட பராமரிப்பு செய்வது கிடையாது. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை வழியாக வரும் கால்வாய், மண்டபம் சாலையைக் கடந்து, ஓட்டேரி கால்வாயில் செல்கிறது.இந்த மண்டபம் சாலை கால்வாயில், குப்பை மற்றும் கழிவுகள் குவிந்துள்ளன. அதே போல், நீர் வெளியேறும் கால்வாயில் போதிய பராமரிப்பு இல்லாததால், முட்செடிகள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. எனவே, கால்வாயில் தேங்கியுள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி, உடனடியாக துார் வார வேண்டும்.நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், நீரோட்டம் தடைபட்டு, சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி