உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அழுகிய நிலையில் பெண் சடலம் தேசிய நெடுஞ்சாலையில் மீட்பு

அழுகிய நிலையில் பெண் சடலம் தேசிய நெடுஞ்சாலையில் மீட்பு

திருவேற்காடு, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி, பெங்களூரு நெடுஞ்சாலை ஓரத்தில், முட்புதரில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.திருவேற்காடு போலீசாரின் விசாரணையில், 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம், முகம் சிதைக்கப்பட்டு உடல் அழுகிய நிலையில், அரை நிர்வாணமாக இருப்பது தெரிந்தது.போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்த பெண் யார் என்பது குறித்தும், பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று உடலை இங்கு வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.இரவு வேளைகளில் ஏராளமான வாகனங்கள் நின்று செல்லும் இப்பகுதியில், அரை நிர்வாணமாக பெண் சடலம் மீட்கப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ