உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உண்டியல் உடைத்து திருடிய வாலிபர் கைது

உண்டியல் உடைத்து திருடிய வாலிபர் கைது

எண்ணுார், விநாயகர் கோவில், உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். எண்ணுார், காமராஜர் நகரில், ஓம் நவசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள், வாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.மேலும் கோவிலில் வெள்ளி தீர்த்த டம்ளர், குத்து விளக்கு, தாம்பூலம், தீபாராதனை விளக்கு, உண்டியலில் இருந்த காணிக்கை பணம் 2,000 ரூபாய் உள்ளிட்டவற்றை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இது குறித்து எண்ணுார் போலீசார் விசாரித்தனர்.இதில், திருட்டில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப், 21, என்பவரை, நேற்று மாலை கைது செய்தனர்.இவர் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன. விசாரணைக்கு பின், பிரதாப் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ