உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பா.ஜ., நலத்திட்ட பிரிவு 48 நாள் முகாம் நிறைவு

பா.ஜ., நலத்திட்ட பிரிவு 48 நாள் முகாம் நிறைவு

மடிப்பாக்கம்:பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு சார்பில், பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்கள் வாயிலாக சேவை மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இத்திட்டங்களில் எவ்வாறு இணைந்து பயன் பெறுவது என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக, மடிப்பாக்கம் பா.ஜ., சார்பில், 48 நாள் தொடர் முகாம் நடத்தப்பட்டது.மடிப்பாக்கம் மண்டல பா.ஜ., தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம், விஷ்வ கர்மா திட்டத்தின் கீழ் 14 வகையான தொழில் முனைவோருக்கு கடன் உதவி உள்ளிட்ட மத்திய அரசின் பல திட்டங்களில், தகுதியானோர் இணைந்து பயன் பெறும் விதமாக, 48 நாட்களாக முகாம் நடத்தப்பட்டது.மடிப்பாக்கத்தின் 187, 188 ஆகிய இரு வார்டுகளிலும் உள்ள 48 ஓட்டுச்சாவடி மையங்களில் ஒரு நாள் என, முகாம் நடந்தது. கடைசி நாள் முகாம், மடிப்பாக்கம் அய்யப்பன் நகரில் நடந்தது.தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கரு.நாகராஜன், தென்சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ., செயலர் மாலா செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று, பயனாளிகளை திட்டத்தில் இணைத்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை