உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 9 டன் குட்கா அழிப்பு

9 டன் குட்கா அழிப்பு

கொடுங்கையூர், சென்னை காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் பறிமுதல் செய்த குட்கா பொருட்கள், நீதிமன்ற உத்தரவின்படி கொடுங்கையூர் குப்பை கிடங்கில் அழிக்கப்பட்டன. கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 1,993 கிலோ குட்கா பொருட்கள், அபிராமபுரத்தில் 20 கிலோ, அமைந்தகரையில் 152 கிலோ, செம்பியத்தில் 1,152 கிலோ, நுங்கம்பாக்கத்தில் 533 கிலோ.பெரவள்ளூரில் 1,650 கிலோ, வியாசர்பாடியில் 500 கிலோ, எம்.கே.பி.நகரில் 14 கிலோ என, 9 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றை, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் அதிகாரிகள் முன்னிலையில், 'பொக்லைன்' வாயிலாக பெரிய பள்ளம் தோண்டி கொட்டி அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ