உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிலாப் உடைந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி

சிலாப் உடைந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி

வடபழனி, அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 40. இவருக்கு சொந்தமான வீடு, வடபழனியில் உள்ள வள்ளியம்மாள் தெருவில் உள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதற்காக தரைத்தளத்தை உயர்த்துவதற்கும், வீட்டின் சில பகுதிகளை இடித்து புதுப்பிக்கவும் முடிவு செய்தார். அதற்காக, பில்டிங் ஒப்பந்ததாரர் அபிஷேக் என்பவரிடம் இந்த பணியை ஒப்படைத்தார். நேற்று முன்தினம் மாலை, வீட்டை புதுப்பிக்கும் பணியில் கட்டட தொழிலாளிகள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷமீம் ஷேக், 23, என்பவர் மீது சிலாப் உடைந்து விழுந்தது. இதில், தலையில் பலத்த காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை