உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

கே.கே., நகர்: கே.கே., நகர் பாரதிதாசன் காலனி பிரதான சாலை நடுவே கழிவுநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலம், 138வது வார்டு கே.கே., நகரில், பாரதிதாசன் காலனி பிரதான சாலை உள்ளது. ஈக்காட்டுதாங்கலில் இருந்து கே.கே., நகர் கழிவுநீர் உந்து நிலையத்திற்கு கழிவுநீர் குழாய் அமைக்க, பாரதிதாசன் காலனி பிரதான சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டது. குழாய் பதிப்பு பணி முடிந்தும், இப்பள்ளம் முறையாக மூடப்படாததோடு, ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளன. ஜல்லிக்கற்கள், டயர்களை பதம்பார்க்கின்றன. தவிர சறுக்கி விழும் நிலை இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இச்சாலை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை