உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பரங்கிமலை - சென்ட்ரல் தடத்தில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்க திட்டம்

பரங்கிமலை - சென்ட்ரல் தடத்தில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்க திட்டம்

சென்னை, பரங்கிமலை - கோயம்பேடு - சென்ட்ரல் மெட்ரோ ரயில் தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையம் - விம்கோ நகர் மெட்ரோ தடத்தில், அலுவலக நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் அதிகபட்சமாக, ஏழு நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், பரங்கிமலை - சென்ட்ரல் தடத்தில் அலுவலக நேரங்களில், 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.மற்ற நேரங்களில், 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதனால், பயணியர் மெட்ரோ ரயில் சேவைக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க, நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:விமான நிலையம் - விம்கோ நகர் தடத்தில் தினமும் 2 லட்சம் பேரும், பரங்கிமலை - கோயம்பேடு - சென்ட்ரல் தடத்தில் 1.30 லட்சம் பேரும், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.இந்த எண்ணிக்கை விரைவில் 4 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கிறோம். இதற்கிடையே, பரங்கிமலை - சென்ட்ரல் தடத்தில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்குவது குறித்து, ஆய்வு நடத்தி வருகிறோம்.விரைவில், தேவையான அளவிற்கு மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை